காய்கறிகடையில் திருடியவர் கைது

சேலம்: சேலத்தில் காய்கறிகடையில் பூட்டை உடைத்து ₹10 ஆயிரத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  சேலம் குகை புலிக்குத்தி தெருவை சேர்ந்தவர் சபியுல்லா. இவரது மனைவி ஜெபினா(37). இவர் அதேபகுதியில் காய்கறி கடை வைத்துள்ளார். கடந்த 21ம் தேதி கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் வைத்திருந்த ₹10 ஆயிரத்தை  மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.  இதுகுறித்த ஜெபினா செவ்வாய்பேட்டைபோலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதில், கிச்சிAப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப்(33) காய்கறி கடையில் பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 3ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: