பக்தர்களுக்கு அன்னதானம்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகில் உள்ள அரசம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில், 18ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.  அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செAய்யப்பட்டு, கலச பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பங்காரு அடிகளார் பிறந்த நாளை முன்னிட்டு, அரசு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.  விழா ஏற்பாடுகளை சுப்பிரமணி நைனார், நடராஜ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.    

Related Stories: