டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் பர்மா காலனியை சேர்ந்தவர் ஜான் வில்லியம்(50). இவர் பொன்மலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் மதுபான பாட்டில் வாங்கிவிட்டு பணம் தரவில்லை, பணம் தருமாறு கேட்டதால் ஜான் வில்லியமை ஆபாசமாக திட்டியதோடு, மறைத்த வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்த ரூ,1000 பணத்தை பறித்து சென்றார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து பொன்மலையை சேர்ந்த பரத்குமார்(25) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: