27ல் குறைதீர் நாள் கூட்டம் மனு கொடுத்து பயன்பெற கரூர் கலெக்டர் அழைப்பு

கரூர்: 27ம்தேதி நடைபெறும் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு கொடுத்து பயன்பெறலாம் என்று கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் மார்ச் 27ம் தேதி அன்று நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கம், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் காரணத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள 2ம் தளத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

வழக்கம் போல, பொதுமக்கள் தங்கள் மனுக்களை பதிவு செய்யும் இடத்தில் பதிவு செய்து கொண்டு, 2வது தளத்திற்கு வந்து மனுக்களை அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வழங்கப்படும் கோரிக்கை மனுக்கள் தரைத்தளத்தில் பெறப்படும். மேலும், கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு இலவசமாக கோரிக்கை மனுக்களை எழுதிக் கொடுக்கவும், கோரிக்கை மனுக்கள் எழுதும் இடத்தில், அனைவருக்கும் நீர் மோர் வழங்கவும், வரிசையில் நின்று மனு கொடுப்பவர்கள், கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு, வெயிலில் நிற்காத அளவுக்கு மேற்கூரைகள் அமைத்தும், அந்த பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் மூலம் குடிநீர் மற்றும் மண் பானைகள் மூலம் குடிநீர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் பொதுமக்கள் சிரமம் எதுவும் இன்றி தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: