கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தர்மபுரி, ஓசூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தினசரி 30 வாகனங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.  இந்நிலையில், தெலுங்கு வருடப் பிறப்பான ‘யுகாதி’ பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் பூக்கள் அதிகரித்து காணப்பட்டது. மேலும், இந்த யுகாதி பண்டிகை காரணமாக சாமந்தி, ரோஸ் ஆகிய பூக்கள் அதிகளவில் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் நேற்று கோயம்பேடு சந்தைக்கு வரும் பூக்களின் வரத்து குறைந்து பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.  கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.80க்கு விற்ற சாக்லேட் ரோஸ் விலை அதிகரித்து நேற்று ரூ.140க்கும், மல்லிகை ரூ.300க்கும், ரூ.50க்கு விற்ற பன்னீர் ரோஸ் ரூ.80க்கும், ஐஸ் மல்லி ரூ.200க்கும், ஒரு கிலோ ரூ.70க்கு விற்ற சாமந்திப்பூ 2 மடங்காக விலை அதிகரித்து ரூ.150க்கும், அரளி ரூ.200க்கும், சம்பங்கி ரூ.70க்கும் விற்கப்பட்டது.

Related Stories: