மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா 28ம் தேதி தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், பங்குனி பெருவிழாவின் மார்ச் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பங்குனி மாதம், கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் மிக விமர்சையாக நடைபெறும். 4 மாட வீதியில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்ச கணக்கான மக்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவது வழக்கம். கொரானா காரணமாக கடந்த ஆண்டுகளில் பல்வேறு கட்டுப்படுகள் விதிக்கப்படன. இந்த வருடம் எந்தவித கட்டுப்படுகளும் இன்றி பொதுமக்கள் தரிசனம் பெறலாம்.

மார்ச் 28ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கி, 7ம் நாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. கொடியேற்றம் தொடங்கிய நாளில் இருந்து 10 நாட்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் ஐந்திருமேனிகள் வீதி உலா, பக்தர்களுக்கு அன்னதானம், ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களின் மங்கள இசை நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 10 நாட்களுக்கு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டம் அன்று கூட்ட நெரிசலை தடுக்கவும், திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்க ஏராளமான போலீசார் பாதுக்காப்பு பணிக்கும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், கூடுதல் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

Related Stories: