திருச்சி மத்திய சிறை நூலகத்திற்கு புத்தகங்கள்

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் 1,600க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனை காலம் முடிந்து சிறையில் இரு்து வெளியே செல்லும் போது எவ்வித குற்ற உணர்வும் இல்லாத வகையில் சுய தொழில் துவங்கி நடத்தும் வகையில் சிறையில் பல்வேறு சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கம்ப்யூட்டர் பயிற்சி, ஐடிஐ பயிற்சி, பேக்கரி பொருட்கள் தயாரிப்பு, விவசாயம், மரத்தொழில், இனிப்பு மற்றும் காரம் தயாரித்தல் உள்ளிட்டவைகள் வழங்கபபட்டு வருகிறது. மேலும், சிறை கைதிகளுக்காக, சிறையில் உள்ள நூலகத்தில் அறிவுபூர்வமான புத்தகங்களை படித்து பொது அறிவை வளர்த்திடவும் தங்கள் வாழ்க்கை பயணத்தை நன்மையான வழியில் செயல்படுத்தவும் ‘கூண்டுக்குள் வானம்’ என்ற தலைப்பின் கீழ் சிறை வளாகத்தில் புத்தக தானம் சேகரிக்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற புத்தகங்களை சிறைக்கு தானமாக வழங்கிக் வருகின்றனர். சிறைவாசிகள் தாங்கள் செய்யும் குற்ற செயல்களில் இருந்து மனம் திருந்தி மறுவாழ்வு வாழ அவர்கள் புத்தகம் படிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதனை ஊக்குவிக்கும் வண்ணம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், சிறையில் உள்ள நூலகத்திற்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை திருச்சி சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவர் ஜெயபாரதியிடம் வழங்கினார். அப்போது, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் மற்றும் சிறை மேலாளர் திருமுருகன் ஆகியோர் இருந்தனர். கலெக்டர் வழங்கினார் நெடுஞ்சாலைத்துறையினர் நடத்திய ஆய்வில் கோட்டை ரயில்வே மேம்பாலம் 151 ஆண்டுகள் கடந்து விட்டதால் கனரக வாகனங்களுக்கு ஏற்ற வகையில் இல்லை எனவும், பாலத்தை முழுமையாக இடித்துவிட்டு தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதுப்பாலம் கட்டப்பட வேண்டும் என கூறப்பட்டது.

Related Stories: