துவாக்குடி வடக்குமலை அரசு பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்கு மலையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம்’ நிகழ்ச்சி நடந்தது. தமிழக அரசின் அறிவிப்பின்படி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கற்றல் இடைவெளிக்கு தீர்வு காணும் வகையில், 1ம் வகுப்பு முதல், 3ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. குழந்தைகளிடமும், ஆசிரியர்களிடமும் ஏற்பட்டுள்ள தாக்கத்தை, மக்களிடமும் முக்கியமாக பெற்றோர்களிடமும் கொண்டு சென்ற, ‘எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்’ என்னும் திட்டத்தின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியானது பள்ளி வளாகத்தில் நடந்தது.

பள்ளித் தலைமையாசிரியர் கருணாம்பாள் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களுடைய செயல்பாடுகளைக் காண்பித்து எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து பெற்றோருக்கு விளக்கினர்.ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளால் தயாரிக்கப்பட்ட எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், வரைபடங்கள், கைவினை பொருட்கள் ஆகியவை காட்சி படுத்தப்பட்டன. மேலும் மாணவ, மாணவிகள் தங்களது ஆங்கில உரையாடல், பேச்சுத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், இல்லம் தேடி கல்விக் குழுவினர் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: