கஞ்சா கடத்தி வந்த வாலிபர் தப்பி ஒட்டம்

சேலம், மார்ச் 23: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வாலிபர், பையை போட்டு விட்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்றுஅதிகாலை பள்ளப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பெரிய பையை எடுத்து கொண்டு வாலிபர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை எஸ்ஐ ரமேஷ் அழைத்து விசாரிக்க முயன்றார். அப்போது அந்த வாலிபர் பையை போட்டு விட்டு தப்பியோடி விட்டார். பின்னர் போலீசார் அந்த பையை போலீஸ் ஸ்டேஷனுக்கு பையை எடுத்த சென்று சோதனை செய்ததில், அதில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார், கஞ்சாபையை போட்டு விட்ட தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

Related Stories: