கிருஷ்ணராயபுரம் அருகே ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையில் நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி பேசுகையில். ஆட்டோ டிரைவர்கள் தங்கள் ஓட்டும் ஆட்டோவில் தங்களின் முழு விவரங்களான பெயர், முகவரி, மொபைல் நம்பர், ஆட்டோ லைசன்ஸ் நம்பர் போன்றவை ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு எளிதில் தெரியும்படி மாட்டி வைத்திருத்தல் வேண்டும்.

ஆட்டோ ஓட்டும்போது டிரைவர்கள் கண்டிப்பாக சீருடை அணிந்திருக்க வேண்டும், மேலும் ஆட்டோ டிரைவர்கள் எவரேனும் மது போதையில் ஆட்டோ ஓட்டினார் என தெரிந்தால், உடனடியாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ஆட்டோவை டிரைவர்கள் வேகமாக ஓட்டக்கூடாது கூறினார். கூட்டத்தில் லாலாபேட்டை பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: