அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா

ஈரோடு:  ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பில் தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.  ஈரோடு  மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பில், தமிழிசை விழா மற்றும் இசைப்பள்ளியின்  23வது ஆண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா  ஈரோட்டில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பாராட்டு  சான்றிதழ்களை வழங்கிய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:

தமிழ்நாடு  அரசின் கலைப்பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் 17 மாவட்ட அரசு இசைப்  பள்ளிகள் மற்றும் 4 இசை கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்,  மாணவிகளுக்கு ஆண்டு தோறும் இசை திறனை வளர்ப்பதற்காக தமிழிசை விழாக்கள்  நடத்தப்பட்டு வருகிறது.  இந்தாண்டு தமிழிசை விழா ஈரோடு மாவட்ட அரசு  பள்ளியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. ஆண்டு தோறும் இசை பள்ளிகளில் பயிலும்  மாணவ, மாணவிகளுக்கு கலை போட்டிகள் மற்றும் விளையாட்ட  போட்டிகள்  நடத்தப்படுகிறது.

அதன்படி இவ்வாண்டு 17 விதமான கலைப் போட்டிகள் மற்றும்  விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் குரலிசை, ஓவியம்,  பரதநாட்டியம், கிராமிய நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.  இவ்வாறு பேசினார்.  இந்நிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர்  (பொ) கோபாலகிருஷ்ணன், மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர்  சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு பரிசளிப்பு

Related Stories: