பள்ளப்பட்டியில் தமுமுக, மமக பொதுக்குழு கூட்டம்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில் தமுமுக, மமக கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது. மாநில பொருளாளர் கோவை உமர் மற்றும் கரூர் மாவட்ட மாநில பிரிதிநிதி நூர்தீன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் நகராட்சி வார்டு உறுப்பினர் சாகுல் ஹமீது போட்டியின்றி தமுமுக மமக வின் கரூர் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கரூர் மாவட்ட செயலாளராக முஹம்மது அன்சாரி, பள்ளபட்டி செயலாளரா அமானுல்லா, தமுமுக மமக பொருளாளராக பதுருதீன் ஆகியோரும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளப்பட்டி நகர தலைவராக பீர்க்கலாம் அபுத்தாஹிர் மற்றும் பள்ளப்பட்டி நகர செயலாளராக முகமது ரசூல் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

Related Stories: