ஈரோடு பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் விழா கொண்டாட்டம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட திருநகர் காலனி நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி நேற்று எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை அருணாதேவி தலைமை வகித்து பேசினார். ஆசிரியர் விக்டர் செல்வக்குமார் எண்ணும் எழுத்தும் திட்ட விளக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி 1ம் மண்டல தலைவர் பழனிசாமி பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.பழனிசாமி, எண்ணும் எழுத்தும் ஆசிரியர்கள் பிரிசில்லா ஜாய்ஸ், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஜெனிபர் நன்றி கூறினார்.

இதேபோல், ஈரோடு மாநகராட்சி பெரியவலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாடுவோம் விழாவிற்கு எஸ்எம்சி தலைவர் தலைவர் சர்மிளா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் மணி, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் பங்கேற்று எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து பேசினார். வட்டார கல்வி அலுவலர் சந்தியா, கவுன்சிலர் வனிதாமணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கமுத்து, ஆசிரியைகள் கீதாபாலன், காந்திமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: