பாம்பு கடித்து தொழிலாளி பலி

ஈரோடு:  பவானி  அடுத்துள்ள மைலம்பாடி, புதிய காலனியை சேர்ந்தவர் நாராயணசாமி(47). தொழிலாளி. இவர்  கடந்த 14ம் தேதி இரவு சிறுநீர் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே நடந்து  சென்ற போது, பாம்பு ஒன்று காலில் கடித்துவிட்டது.  இதையடுத்து உடனடியாக  பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக  சேலம் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை  பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் நாராயணசாமி  இறந்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருபியுள்ளது.’’

Related Stories: