பவானி, கோபியில் கொட்டியது கோடை மழை

ஈரோடு:  பவானி, கோபியில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கோடை மழை கொட்டியது.  தமிழகத்தில்  வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து  வருகின்றது. ஈரோடு மாவட்டத்திலும் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில்,  நேற்றுமுன்தினம் இரவு பவானி, கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த  மழை பெய்தது.  காற்றுடன் கூடிய மழையின் காரணமாக ஆங்காங்கே மரக்கிளைகளும்  முறிந்துவிழுந்தது. நேற்றைய காலை நிலவரப்படி பவானியில் அதிகபட்சமாக 28.6  மில்லிமீட்டரும், கோபியில் 26.2 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 90.20 அடியாகவும்,  அணைக்கான நீர் வரத்து 689 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து குடிநீர்  மற்றும் பாசன தேவைக்காக 700 கனஅடி மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: