டூவிலர் திருடிய வாலிபர் கைது

திருச்சி: திருச்சி எடமலைப்பட்டிபுதூர் புதுதெருவைச் சேர்ந்தவர் விஷ்ணு(27). சம்பவத்தன்று வீட்டின் முன்பு அவரது டூவிலரை நிறுத்தி வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது டூவிலரை காணவில்லை. இதுகுறித்து விஷ்ணு அளித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதுார் போலீசார் வழக்கு பதிந்து காந்திநகரைச் சேர்ந்த கார்த்திக் (20) என்ற வாலிபரை கைது செய்து அவரிடம் டூவிலரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: