சிட்டுக்குருவிகளுக்கு தீங்கிழைக்க மாட்டோம் பள்ளி மாணவர்கள் உறுதியேற்பு

க.பரமத்தி: கரூர் மாவட்டம், கார்வழி தொடக்கப்பள்ளியில் தேசிய பசுமைபடை சார்பில் உலக சிட்டுக்குருவி தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள் சிட்டுகுருவி உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். க.பரமத்தி ஒன்றியம் கார்வழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தேசிய பசுமைபடை சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதியினை சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிட்டுக்குருவிகள் இனம் சமீப காலமாக குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் அதன் வாழ்வுக்கு எதிர்நோக்கும் பிரச்னைகளையும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் மற்றும் ஆசிரியர் தமிழரசன் ஆகியோர் எடுத்துக்கூறினார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்கள் சிட்டுகுருவி உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துகொண்டு சிட்டுக்குருவிகளுக்காக பள்ளி வளாக சுவற்றில் கம்பு, சோளம், தண்ணீர் வைத்தனர்.

Related Stories: