சட்டவிரோதமாக மது விற்ற 29 பேர் கைது: 221 மது பாட்டில்கள் பறிமுதல்

ஈரோடு, மார்ச் 21: ஈரோடு மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுவதை தடுக்க மாவட்ட காவல்துறை நிர்வாகம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி நேற்றுமுன்தினம் ஒரே நாளில் வரப்பாளையம், வெள்ளோடு, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, கொடுமுடி, ஈரோடு தாலுகா, ஈரோடு டவுன், வெள்ளித்திருப்பூர், அரச்சலூர், திங்களூர், ஆசனூர், ஆப்பக்கக்கூடல், கோபி, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சட்டவிரோதமாக மது விற்றதாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மொத்தம் 221 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: