திருச்சியில் டிராபிக் வார்டன் பணிக்கு ஆட்கள் தேர்வு

திருச்சி: திருச்சியில் காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்து பணியில் ஈடுபடும் டிராபிக் வார்டன்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. திருச்சி மாநகரில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஆங்காங்கே டிராபிக் வார்டன்கள் எனப்படும் போக்குவரத்து காப்பாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே திருச்சி மாநகரில் காலியாக உள்ள 100 டிராபிக் வார்டன்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில், நேற்று டிராபிக் வார்டன்கள் தேர்வு கே.கே. நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்தப் பணிக்கு எந்த ஒரு பண பயன்களும் கிடையாது என்பதனால் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமூகநலன் மற்றும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற ஆர்வமிக்க 180 பேர் கலந்து கொண்டனர். டிராபிக் வார்டன்கள் தேர்வு பணியினை மாநகர காவல் துணை ஆணையர் தேவி தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அதன் பின்னர், எடை மற்றும் உயரம் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் தகுதியுடைய 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் விரைவில் பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories: