காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம்

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில், இந்திய ஒற்றுமை இயக்கம் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார் தலைமையில், வனத்துறை விடுதி முதல் பஸ் நிலையம் வரை பேரணி நடைபெற்றது. பொது கூட்டத்தில் செல்லகுமார் எம்.பி பேசுகையில், ‘காஸ் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பொது நிறுவனங்கள் அனைத்தையும், பாஜக அரசு தனியாருக்கு தாரை வார்த்துள்ளது,’ என்றார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் தேன்குஅன்வர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன், துணை செயலாளர் இளைஞரணி  மேற்கு மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், மகளிர் அணி தலைவி ரோஜம்மா, மாது, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: