செல்போனை ஹெச் எம் பறித்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

கோபி,மார்ச்20:  கோபி அருகே உள்ள நம்பியூரை சேர்ந்தவர் ரமேஷ்(47). ஹார்டுவேர்ஸ் கடை ஊழியர். இவரது மனைவி அமுதா(43) பனியன் தொழிலாளி. இவர்களது மகள் வர்ஷா(15)நம்பியூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். வர்ஷா பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்ததோடு, கடந்த சில நாட்களுக்கு முன் செல்போனை வாங்கி வைத்தனர்.இதனால் சாப்பிடாமல் அடம்பிடித்து பெற்றோரிடம் இருந்து மீண்டும் செல்போனை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் பொதுத்தேர்வு முடியும் வரை செல்போனை பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர் கூறியும் வர்சா அதை ஏற்காத நிலையில்,அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று, மகளிடம் இருக்கும் செல்போனை வாங்கி வைக்குமாறு  கூறி உள்ளனர். அதைத்தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வர்ஷாவிற்கு அறிவுரை கூறியதோடு, செல்போனை வாங்கி வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த வர்ஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: