மரபுசார் நீதிமன்றத்தில் நீதிபதி ஆய்வு

பரமக்குடி, மார்ச் 19: பரமக்குடி மரபுசார் நீதிமன்றத்தில் உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, தேனி மாவட்டம் பெரியகுளம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆகிய மூன்று நீதிமன்றங்கள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கட்டிடங்கள் ஆகும். இந்த மூன்று நீதிமன்ற கட்டிடங்கள் தலா ரூ.ஒரு கோடி 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டன. பெரியகுளம், மானாமதுரை ஆகிய இடங்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

பரமக்குடி மரபுசார் நீதிமன்றம் புதுப்பிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி, மரபுசார் நீதிமன்றத்தில்  கட்டுமானங்களை ஆய்வு செய்தார். சுண்ணாம்பு, மணல் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி பாரம்பரியம் மாறாமல் பழமையான கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஆய்வின் போது மாவட்ட கூடுதல் நீதிபதி சாந்தி,  வழக்கறிஞர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: