அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி சொத்து வரி பாக்கி குடிநீர் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு, மார்ச் 19:  ஈரோடு மாநகராட்சியில் வீடு, வணிக கட்டுமானங்கள், காலி இடங்களுக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை வசூலித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் மாநகராட்சியின் திட்டப்பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில், நீண்ட காலமாக வரி நிலுவை வைத்துள்ளவர்களிடம், முறையாக வசூலிக்க மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உத்தரவிட்டார்.

இதன்பேரில், மாநகராட்சி வருவாய் பிரிவினர் வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் நேற்று ஈரோடு மாநகராட்சி 1ம் மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணன் வீதியில் சொத்து வரி ரூ.37 ஆயிரத்து 972 பாக்கி வைத்திருந்த வெற்றிச்செல்வி என்பவரது வீட்டின் குடிநீர் இணைப்பினை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். வரி தொகையை வருகிற 31ம் தேதிக்குள் செலுத்திடவும், வரியை செலுத்தாவிட்டால் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து, நடப்பாண்டுக்கான வரி பாக்கி வைத்துள்ளவர்களிடம் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, வரித்தொகையை விரைந்து செலுத்திட அறிவுறுத்தி சென்றனர்.

Related Stories: