சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி இன்று துவங்குகிறது: கலெக்டரிடம் மாணவ,மாணவிகள் வாழ்த்து

ஈரோடு, மார்ச் 18: தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசின்  ஓராண்டு அரும்பணிகள் அணிவகுப்பு குறித்து சாதனைகள் மற்றும் திட்டங்கள் உள்ளடக்கிய ”ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி மக்களின் கனவுகளைத் தாங்கி” எனும் தலைப்பிலான அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், ஈரோடு, சத்தி சாலையில் உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில், இன்று முதல் மார்ச் 27ம் தேதி வரை 10 நாள்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறவுள்ளது.  இதன் துவக்க விழா இன்று மாலை 5 மணியளவில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் தமிழ் நாடு அரசின் ஓராண்டு சாதனைகளை காட்சிப்படுத்துதல், மகளிர் சுய உதவிக்குழுவின் சாலையோர உணவகம், சிறுதானியம் மற்றும் பல்வேறு உணவுடன் கூடிய உணவுத்திருவிழா, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப் பை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு, மாணவர்களுக்கு பயிற்சி முகாம்கள், பெண்கள், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், பல்வேறு துறைகளில் தமிழ் நாடு அரசின் திட்டங்கள் குறித்து காட்சிப்படுத்துதல், உள்ளுர் கலைஞர்கள், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறவுள்ளன.எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து பயனடையுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: