பஸ் நிலையம் விரிவாக்கம் மார்ச் 22 உலக தண்ணீர் தினம்: கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு

ஈரோடு,மார்ச் 18:  வரும் 22ம் தேதி உலக தண்ணீர்  தினமாக அனுசரிக்கப்படுவதால் அன்றைய தினம் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைத்தப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள், நிர்வாகம்,பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்படும்.ஊராட்சியின் தணிக்கை அறிக்கை மக்கள் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்படும்.

மேலும் அந்த ஊராட்சியில் சுத்தமான குடிநீர் வழங்கல், நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம், ஊரக நீர் நிலை விவரம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், அதன் பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தூய்மை பாரத இயக்கம், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்தல், பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதித்தல் போன்றவை குறித்து மக்களிடம் விளக்கமளிக்கப்படும்.

கிராம குடிநீர் வினியோக செயல் திட்டத்தை கிராமசபை உறுப்பினர்களிடம் கலந்தாய்வு செய்து, ஒப்புதல் பெற வேண்டும். ஊராட்சிக்கு வழங்கப்படும் கள ஆய்வுக் கருவி மூலமாக 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து, உரிய பதிவேட்டில் பதிய வேண்டும். அனைத்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளிலும் குளோரின் கலக்கும் கருவிகளை அமைத்து, குடிநீரில் குளோரின் கலப்பதை உறுதி செய்ய வேண்டும். கிராமசபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுகின்றனவா ? என்பதை கண்காணிக்க பற்றாளர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories: