ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை உறையூரில் மார்ச் 17ல் சிறப்பு முகாம்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் வருகின்ற மார்ச் 17ம் தேதி உறையூர் நகர்நல மையத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களால் இக்கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,100, ஊக்குவிப்பாளர்களுக்கு ரூ.200 தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை, ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் குடும்பநல கருத்தடை சிகிச்சை செய்யப்படும்.

சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியமில்லை. சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்க்கு செல்லலாம். கத்தியின்றி, ரத்தசேதமின்றி செய்யப்படும் இக்கருத்தடை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் நவீன குடும்பநல கருத்தடை செய்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்கள் அறிய குடும்பநல அலுவலகத்தை 0431-2460695 என்ற எண்ணிலோ, மாவட்ட விரிவாக்க கல்வியாளரை 9443246269 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துணை இயக்குநர் (குடும்பநலம்) தெரிவித்துள்ளார்.

Related Stories: