லால்குடி, மார்ச் 14: லால்குடி சிறுதையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெறும் புதிய வகுப்பறைகள் கட்டும் கட்டுமானப் பணிகளை சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மாவட்டம் லால்குடியில் சிறுதையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து 2021-22 ஆண்டின் ரூ.18 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.