திருச்சி, மார்ச்.14: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில நகர்புற/ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் தனியார் நிறுவனங்களின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த 18 வயது பூர்த்தியடைந்த, குறைந்தபட்சம் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு பெற்ற இளைஞர்களுக்கு (இருபாலரும்) அவரவர் தகுதிக்கேற்ப, தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளித்திட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) மூலம் வருகிற மார்ச் 15ம் தேதி திருச்சி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
