பொன்னேரி: பழவேற்காடு அடுத்த கலங்கரை விளக்கம் கிராமத்தில் வசிப்பவர் மணிகண்டன். மீனவர். இவரது 8 மாத ஆண் குழந்தை லிக்கித் சாய். நேற்று முன்தினம் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், பழவேற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். ஆனால், குழந்தையின் உடல்நிலை மோசமாகவே பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பழவேற்காடு பகுதியை ஒட்டி உள்ள மீனவ கிராமங்களில் ஏராளமானோர்க்கு மர்ம காய்ச்சல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
