ஜமீன் அகரம் கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து 23 செம்மறி ஆடுகள் பலி

வேட்டவலம், மார்ச் 10: ஜமீன் அகரம் கிராமத்தில் மர்ம விலங்கு கடித்ததில் 23 செம்மறி ஆடுகள் பலியானது. வேட்டவலம் அடுத்த ஜமீன் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம்(55). இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஆட்டு பட்டி அமைத்து 35க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினமும் செம்மறி ஆடுகளை காலை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மீண்டும் மாலை ஆடுகளை ஆட்டு பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை 6 மணி வழக்கம் போல் ராஜாராம் நிலத்தில் உள்ள ஆட்டு பட்டிக்கு சென்றார்.

அப்போது அங்குள்ள செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் ரத்த வெள்ளத்தில் குடல் சரிந்து இறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வைப்பூர் கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த்க்கு தகவல் தெரிவித்தார்.இதில் மர்ம விலங்கு கடித்ததில் 23 செம்மறி ஆடுகள் பலியானது தெரியவந்தது. மேலும் அங்கு வந்த மருத்துவர் கவிதா இறந்து ஆடுகளை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து, பின்னர் செம்மறி ஆடுகளை அதே பகுதியில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி புதைத்தனர். வேட்டவலம் அடுத்த ஜமீன் அகரம் கிராமத்தில் மர்ம விலங்கு கடித்ததில் 23 செம்மறி ஆடுகள் பலியானது.

Related Stories: