தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி

ஈரோடு:  தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவை முன்னிட்டு நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இதில் ”எங்கும் தமிழ் எதிலும் தமிழ், பிற மொழிகளை வாழவைத்து தன்னையும் காத்து நிற்கும் மொழி. தமிழ்மொழியே, தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு, தனி மொழியானதும் தமிழே தமிழ் மொழியானதும் தமிழே” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏந்தி சென்றனர். தொடர்ந்து, சம்பத் நகர் வழியாகச் சென்று, அங்குள்ள நவீன நூலகத்தில் பேரணி நிறைவடைந்தது.

இப்பேரணியில் குமலன் குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, ஈரோடு சிக்கநாயக்கர் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, தமிழர்களின் பாராம்பரியத்தை உணர்த்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகளின் பறை இசை, சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் ரெஜினாள்மேரி, தொழிலாளர் நல ஆணையர் திருஞானசம்பந்தம், சார்நிலை கருவூல அலுவலர் செந்தில்குமார், கவிஞர்கள் பிரதாப்,  இந்திரா மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: