சேலத்தில் வழிப்பறி கொள்ளையன் குண்டாசில் கைது

சேலம்: சேலம் சன்னியாசிகுண்டு பாறைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் நிர்மல்தாஸ்(எ) தாஸ்(22), பிரபல வழிப்பறி கொள்ளையன். கடந்த பிப்ரவரி 2ம் தேதி, சீலநாயக்கன்பட்டி இரட்டைகோயில் அருகே, பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை வழிமறித்த நிர்மல்தாஸ், கத்தியை காட்டி மிரட்டி ₹5 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றார். இதுபற்றி அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்து, நிர்மல்தாசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  நிர்மல்தாஸ் மீது, ஏற்கனவே கொண்டலாம்பட்டி, கிச்சிப்பாளையம்  போலீசில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. ஜாமீனில் வெளியே வந்த அவர், தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், துணை கமிஷனர் லாவண்யா மூலம் கமிஷனர் விஜயகுமாரிக்கு பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையை ஏற்று, நிர்மல்தாசை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க கமிஷனர் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை, மத்திய சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.

Related Stories: