பாடாலூர்: பாடாலூர் அருகே, ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தில் தனியார் வேளாண்மை கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள், விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தில் காளான் வளர்ப்பு மற்றும் அதன் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் எடுத்து கூறினார். அப்போது மாணவர்கள் தெரிவித்தது: காளான் மனிதனுக்கு உணவாக மட்டுமல்லாமல் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. அதிக அளவு புரதச்சத்தும் மிக குறைந்த அளவு கொழுப்பு சத்தும் உள்ளது. மேலும் சர்க்கரை சத்து, அமினோ அமிலங்கள், மற்றும் தாது உப்புகள், நார்ச்சத்து, சாம்பல் சத்து, வைட்டமின்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய உணவுக் காளான்.
