ஓசூர் சந்திரசூடேஸ்வரர் நாக வாகனத்தில் உலா

ஓசூர்: ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோயிலில், மாசி தேர்த்திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடந்து வருகிறது. 4ம் நாளான நேற்று முன்தினம் இரவு, மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வர உற்சவர் நாக வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் தேர்ப்பேட்டையில் வீதியுலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நாளை (7ம் தேதி) நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொள்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட

 உள்ளது.

Related Stories: