பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைமுறை, உணவின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு: வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க அலுவலர்களுக்கு உத்தரவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட அரசு தலை மை மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோ யாளிகளுக்கு வழங்கப்படும் சிசிச்சை முறைகள் குறித்தும், உணவின் தரம் குறித்தும் மாவட்ட கலெக் டர் கற்பகம் திடீர்ஆய்வு செய்தார். வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துமனையில் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று (4ம்தேதி) திடீர் ஆய்வு மேற்கொண் டார். பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளி கள் பிரிவு, வெளிநோயாளி கள் பிரிவு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மருத்துவமனை யில் உள்புற நோயாளியாக அனுமதிக்கப்படுவர்களுக்கு போதிய படுக்க வசதி கள் உள்ளதா என்றும், வெ ளிப்புற நோயாளிகள் அமருவதற்கு போதிய இருக்கைகள் உள்ளதா என்றும் பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், அங்கிருந்த நோயாளிகளிடம் மருத்துவர்கள் உரிய நேரத்திற்கு வருகை தருகிறார்களா, நல்லமுறை யில் சிகிச்சை அளிக்கின் றார்களா என்றும் கேட்டறி ந்தார். பின்னர், உள்நோயா ளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து, உணவு தயாரிப்பு கூடத்திற்கு சென்ற மாவட்டகலெக் டர், அங்கு உணவு தயாரி க்க தயாராக இருந்த உண வுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வுசெய்தார். மேலும், தினந்தோறும் என் னென்ன உணவு வழங்க ப்படுகிறது என்பது குறித் தும் கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் நோ யாளிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை, படுக்கை கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் போதிய அளவில் குடிநீர் வசதி, கூடுதல் கழிவறை வசதிகள் மேற்கொள்ள நட வடிக்கைஎடுக்கப்படும் என் றும் தெரிவித்தார். மருத்து வமனை வளாகத்தை தூய் மையாக வைத்திருக்க வே ண்டும் என அலுவலர்களு க்கு அறிவுறுத்திய மாவட்ட கலெக்டர் நோயாளிகளுக் கு வழங்கப்படுகிற சிகிச் சை முறைகள் குறித்து நோ யாளிகளின் உறவினர்கள் கூறிய கருத்துக்களை கேட் டறிந்தார்கள்.

பின்னர் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர மருத்துவ முன்னெடுப்பு (தாய்) மைய த்தினைப் பார்வையிட்டு விபத்து மற்றும் அவசர காலத்தில் வருபவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் அனைத்து வசதிக ளையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டு நோ யாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சேவைகள் வழங் க வேண்டும் என மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது பெரம்பலூர் அரசுத் தலை மை மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் சரவணன் மற்றும் தேசிய சுகாதார திட்ட மருத்துவர் அன்பரசு மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: