பெரியமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை எட்டுப்பட்டி கிராம மக்கள் நலம்பெறும் பொருட்டு கிராம சாந்தி பூஜை நடைபெற்றது. இதையடுத்து, புதன்கிழமை காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் மாதேஸ்வரன் கோயிலில் இருந்து தீர்த்த குட ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக வந்து கோயிலை அடைந்தது. இதனையடுத்து விநாயகர் பூஜை, வருண பூஜை, வாஸ்து பூஜை, கும்ப அலங்காரத்துடன் முதல்கால யாகபூஜை நடைபெற்றது.

நேற்று காலை நான்காம் கால யாக பூஜைகளுடன், கோயில் தர்மகர்த்தா ராஜ்மோகன் முன்னிலையில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பலவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் அம்சவல்லி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: