ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சி மொழித் திட்ட விளக்க கூட்டம்

குன்னம், மார்ச் 2: வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சி மொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சி மொழித் திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது. முன்னதாக தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சித்ரா அனைவரையும் வரவேற்றார். தூயத் தமிழ் பற்றாளர் விருது பெற்ற ரவிக்குமார் ஆட்சி மொழித் திட்ட விளக்கம் குறித்து பேசும்போது, தமிழ் ஆட்சி மொழியாக தோன்றியதிலிருந்து தற்போது வரை தமிழின் வளர்ச்சி பற்றி எடுத்துரைத்தார்.

அரசு அலுவலர்கள் அனைவரும் அனைத்து நடைமுறைகளும் தமிழில் கொண்டு வர வேண்டும் என்றும் இப்பணியை ஊராட்சியில் இருந்து தொடங்கி மாவட்டம் முழுவதும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறினார். அலுவலக பணியாளர்களுடன் பதாகை ஏந்தியவாறு ஆட்சி மொழி திட்ட செயலாக்கம் குறித்து விளக்கப்பட்டது. பின்பு அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அரசாணை துண்டறிக்கை வழங்கப்பெற்றன. கூட்டத்தில் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் (கி.ஊ)நன்றி கூறினார்.

Related Stories: