சேலம் தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்கள் சாம்பியன்

சேலம்: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் திருச்செங்கோடு தனியார் கல்லூரியில், மண்டல அளவில் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த தனியார் தொழிற்பயிற்சி மாணவர்கள் கலந்துகொண்டனர். ஓட்டம், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட அனைத்து வித தடகள போட்டிகளும் நடத்தப்பட்டது. இப்போட்டிகளின் முடிவில் சேலம் புனித தெரசா தொழிற்பயிற்சி பள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. மாநில அளவிலாள போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்பள்ளி மாணவர்கள், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் முதலிடமும், ஈட்டி எறிதல், நீளம், உயரம் தாண்டுதல் ஆகியவற்றில் இரண்டாம் இடமும், குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றனர்.

பரிசளிப்பு விழாவிற்கு புனித தெரசா தொழிற்பயிற்சி பள்ளி தாளாளர் ஆசீர்வாதம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் திருமால், சிவபாலன் முன்னிலை வகித்தனர். சேலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குநர் ராஜகோபாலன் கலந்துகொண்டு, புனித தெரசா தொழிற்பயிற்சி பள்ளி அணிக்கு சாம்பியன் கோப்பையை வழங்கினார். இதில், கேஎஸ்ஆர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் குழந்தைவேலு, ராஜம்மாள் ரங்கசாமி தொழிற்பயிற்சி பள்ளி அலுவலர் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: