திதா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி மாவட்டம் முழுவதும் பல்வேறு பணிகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஒன்றிய அலுவலகம் மற்றும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் வழங்கும் திட்டங்கள் சரியாக சென்றுள்ளதாக? ஊராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு நடந்து வரும் பணிகள் என அனைத்தையும் நேரடியாக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு செய்து வருகிறார். இதில் பணிகள் குறித்தும் அந்த பணி மூலம் எந்த அளவிற்கு பயன் உள்ளது என்றும் அதன் தரம் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.
