பெரம்பலூரில் ஆட்சி மொழி விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச் சித்துறை சார்பில், ஆட்சி மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் அரசு மேல்நி லைப்பள்ளியில் ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு, நேற்று (21ம் தேதி) நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்டக் கலெக்டர் கற்பகம் கொடி யசைத்து தொடங்கி வைத் து, பொதுமக்கள் மற்றும் வணிக பெருமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழ ங்கினார். இப்பேரணி பெர ம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி சங்கு பேட்டை வழியாக சென்று திரும்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்த து. இதில் 200-க்கும் மேற்ப ட்ட மாணவ,மாணவியர் பங் கேற்றனர். பேரணியில் து ண்டு பிரசுரங்களை வணி கநிறுவனங்களுக்Aகும், பொதுமக்களுக்கும் மாண வ மாணவியர் வழங்கிச் சென்றனர்.

நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பேசும் போது, “தமிழ் ஆட்சிமொழி சட்டம் கடந்த 1956-ல் இய ற்றப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் 7 நாள்கள் ஆட்சிமொழி சட்ட வாரமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 21ம்தேதி முதல் 28ஆம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப் படுகிறது. இதில் உலக தாய்மொழி நாளான இன்று (நேற்று) விழிப்புணர்வு பேரணி நடத்தப்ப ட்டுள்ளது. நாளை (22ம்தேதி) அரசு பணியா ளர்களுக்கு கணினி தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கள் மற்றும் கணினி தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறி த்த கருத்தரங்கம் நடக்கிறது. 23ம்தேதி ஆட்சிமொழி சட்டம்-வரலாறு, அரசாணை கள், ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கை களும், மொழிப்பயிற்சி, மொழிப்பெயர்ப்பும், கலை ச்சொல்லாக்கம் தொடர்பா ன பயிற்சியும், 24ஆம்தேதி சுற்றோட்ட குறிப்புகள், செ யல்முறை ஆணைகள், குறிப்பாணைகள் எழுதுவதற் கான பயிற்சி வகுப்புகளும் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்அலுவலர் அங்கையற்கண்ணி, ஆர்டிஓ நிறைமதி, தமிழ் வளர்ச்சித்துறை உத வி இயக்குநர் சித்ரா, தமிழ் செம்மல் கவிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ் இலக்கிய அமைப்பினர், தூய தமிழ் பற்றாளர்கள், பதியம் இலக்கிய சங்கத்தினர் உள்ளிட்ட கவிஞர்கள், தமிழறிஞர் கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: