விவசாயிகள் கோரிக்கை காரைக்காலில் என்ஐடி வளாகத்தில் ரூ.4 கோடியில் புதிய ஆடிட்டோரியம் காரைக்கால் நகராட்சிக்கு ஆணையர் நியமிக்க கோரி நகராட்சி ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்

காரைக்கால்,பிப்.21: காரைக்கால் நகராட்சிக்கு ஆணையர் நியமிக்க வலியுறுத்தி நகராட்சி ஊழியர்கள் நாளை முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்த அறிவித்துள்ளனர். இது குறித்து காரைக்கால் நகராட்சி ஊழியர்கள் சங்க தலைவர் சாமிநாதன் காரைக்கால் மாவட்ட கலெக்டருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்கால் நகராட்சி ஆணையராக பொறுப்பு வகித்து வந்த செந்தில்நாதன் நீண்ட விடுப்பில் சென்றுள்ளதால், கடந்த 20 நாட்களாக அலுவலக பணிகள், மக்கள் நலன் சார்ந்த பணிகள், சம்பள பில், பட்டுவாடா செய்யப்பட வேண்டிய மற்ற பில்கள் மற்றும் காசோலைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, அலுவலகமே முடங்கி போய் உள்ளது. எனவே உடனடியாக ஆணையரை நியமித்து நிர்வாகத்தை செம்மைப்படுத்த வலியுறுத்தி காரைக்கால் நகராட்சி ஊழியர் சங்கம் அரசுக்கு கடிதம் அனுப்பியது.

ஆனால், ஆணையரை நியமிக்க எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்காததால், காரைக்கால் நகராட்சி ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பு செய்து கடந்த வாரம் நகராட்சி அலுவலக வாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் காரைக்கால் நகராட்சி ஆணையர் நியமிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் முழு பொறுப்புடன் கூடிய நகராட்சி ஆணையர் பணி அமர்த்தும் வரை நாளை முதல் (22.2.2023) நகராட்சி ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். எனவே உடனடியாக அரசு தலையிட்டு நகராட்சி ஆணையரை பணியமர்த்தும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: