காட்டுப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

பொன்னேரி, அக். 1: காட்டுப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த முகாமை காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் சேதுராமன் துவக்கி வைத்தார்.  துணைத் தலைவர் வினோதினி வினோத்,  ஊராட்சி செயலர் நாகஜோதி முன்னிலை வகித்தனர்.  

முகாமில் பாடியநல்லூர் சங்கர நேத்ராலயா கண் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை. ரத்த அழுத்தம். சர்க்கரை நோய், இசிஜி உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த முகாமில் 220 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  இதில், வார்டு உறுப்பினர்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள், இளைஞர்கள், மகளீர்கள் என  பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: