திருச்சியில் எல்ஐசி முகவர்கள் தொடர் போராட்டம்

திருச்சி,அக்.1: அகில இந்திய அளவில் முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு இணைந்து நடத்தும் மாபெரும் தொடர் போராட்டம் ஜங்ஷன் எல்ஐசி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தஞ்சை கோட்டத்தில் உள்ள அனைத்து முகவர்களும் இதில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பாலிசிதாரர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்.

வெளிநாட்டு பாலிசிதாரருக்கு ஏதுவாக சேவை அளிக்கப்பட வேண்டும். அனைத்துவித விண்ணப்பங்களுக்கும் ஒப்புகை ரசீது தர வேண்டும். 5 வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும்.முகவர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கடன் தர வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

Related Stories: