கூட்டுறவு சிக்கன கடன் சங்க பேரவைக்கூட்டம் வரும் 9 ம்தேதி நடக்கிறது

திருச்சி, அக்.1: மணப்பாறை சரக தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் பேரவைக்கூட்டம் வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மணப்பாறை நகராட்சி துவக்கப்பள்ளி கட்டிட வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் சங்கத்தின் 2021-22ம் ஆண்டு இறுதி தணிக்கை அறிக்கையை வாசித்து அங்கீகரிப்பது. சங்கத்தில் 2021-22ம் ஆண்டு இறுதி தணிக்கை அறிக்கைப்படி சங்கம் ஈட்டிய நிகர லாபம் ரூ.27,76,459.10 கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகளின்படி இலாபப்பரிவினை செய்தல் , சங்கத்தில் 2022-23 ம் ஆண்டுக்கு உத்தேச வரவு-செலவு திட்டத்தை பேரவை அங்கீகாரம் செய்ய உள்ளது. கூட்டுறவு சார்பதிவாளர் சுற்றறிக்கை ந.க.எண். 22477/2019 வ.ஆ.1 நாள் 29.10.2021 ன் படி 4. உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன்தொகை ரூ. 12 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்தி வழங்க சங்க துணை விதி எண்.40 (A) (7) ஐ திருத்தம் செய்து தர கோருவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ந.க.எண். 19067/2020/சப.1நாள் 15.05.2020 படி 5 சங்க பணியாளர் சிறப்பு துணை விதி எண்.65ன்படி பணியாளர் ஒய்வுபெறும் வயதை 58லிருந்து 59 ஆக உயர்த்தி தர கோரப்படுகிறது. பணியாளர் சிறப்பு துணைவிதிகள் 65ன்படி பணியாளர் ஒய்வுபெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வில் செயலாளர் லவுங்கராஜ், துணைத் தலைவர்கள் பவுல்ராஜ், சேவியர்பால்ராஜ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பாண்டியன், இளங்கோவன், குமாரவேலன், ஆரோக்கியதாஸ், லூர்துசாமி, மரியபிரான்சிஸ்சேவியர், அந்தோணியம்மாள், கிரேசி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: