சினிமா தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் மறைவு

கோபி, செப்.30: ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ஜோதி (70). கள்ளிப்பட்டியை குறிப்பிட்டு, கள்ளிப்பட்டி ஜோதி என்றே திரைத்துறையினர் அழைத்தனர். இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் குட்டி கோடம்பாக்கம் என்று கோபியை தமிழ் திரை உலகிற்கு  முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர். ஆரம்ப கால கட்டத்தில் திரைத்துறையினருக்கு வெளிப்புற படப்பிடிப்பு மேலாளராக மட்டுமே பணியாற்றி வந்த  கள்ளிப்பட்டி ஜோதி, சோலையம்மா, தாய்மனசு உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர், நடிகர் பாக்கியராஜ் நடித்த தாவணி கனவுகள், சின்னத்தம்பி உள்பட  ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வெளிப்புற படப்பிடிப்பு மேலாளராகவும் பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கள்ளிப்பட்டி ஜோதி உயிரிழந்தார். இவருக்கு சுதாகர் என்ற மகனும், சுஜாதா என்ற மகளும் உள்ளனர்.

Related Stories: