எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் தீவிபத்து

வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை எம்சி சாலையில் கிருஷ்ணவேணி என்பவருக்கு சொந்தமான பேஷன் 21 என்ற துணிக்கடை உள்ளது. இங்கு 4 பெண்கள், 3 ஆண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று மதியம் கடையின் 2வது தளத்தில் மின் கசிவுனால் தீப்பற்றி எரிந்தது. இதனால் உடனடியாக கடையில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். ஆனால், அதற்குள் கடையில் இருந்த துணிகள் தீயில் எரிந்து நாசமானது.

Related Stories: