இபி சர்வர் பழுது; நுகர்வோர் தவிப்பு

கும்மிடிப்பூண்டி, செப். 30:  கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, பைபாஸ் சாலை, புதுகும்மிடிப்பூண்டி, தேர்வழி, பெத்திக்குப்பம், ஆத்துப்பாக்கம், வழுதலம்பேடு, ரெட்டம்பேடு், பட்டுபுள்ளி, நத்தம், மங்காவரம், அயநெல்லுர்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மின்கட்டணம் செலுத்த கும்மிடிப்பூண்டிதுணை மின்நிலையத்தில் உள்ள மின் கட்டணஅலுவலகத்தில் மின்கட்டணம் கட்டுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு கிராம மக்கள் மின்கட்டணம் செலுத்த வந்துள்ளனர். சர்வர் - இன்டர்நெட் வேலை செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். பல ஊர்களில் இருந்து வந்தவர்கள் 2  மணி நேரம் காத்திருந்தனர். பின்னர் பொதுமக்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு மின் வாரிய அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் புதிய சாப்ட்வேர் லிங்க் செய்துகொண்டு இருக்கிறார்கள். இபி சாப்ட்வேர் விரைவில் சரியாகிவிடும் என்று எடுத்துரைத்தார். இதனால் கூட்டம் கலந்து சென்றது.

Related Stories: