பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை எதிரொலி: மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு, செப். 30: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு  5 ஆண்டு தடைவிதிப்பு எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோட்டில், காவிரி ரோடு, ஜின்னா வீதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பச்சப்பாளியில் உள்ள பாஜ அலுவலகம், இந்து முன்னணி கட்சி அலுவலகம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, பேருந்து நிலையம், ஜிஎச் ரவுண்டானா, மேட்டூர் ரோடு, வீரப்பன் சத்திரம் கருங்கல்பாளையம் உள்பட நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல வழிபாட்டு தலங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், சத்தியமங்கலம், தாளவாடி, கோபி, பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: