நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

குமாரபாளையம், செப்.29: உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு, குமாரபாளையம் நகராட்சியில் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறையினர் நடத்திய இந்த முகாமை, நகரமன்ற தலைவர் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார். வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள், நகராட்சி சுகாதார அலுவலர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசியும், கருத்தடை சிகிச்சையும் செய்யப்படும் என முகாமில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: