₹47 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

சேந்தமங்கலம், செப்.29: சேந்தமங்கலம் ஒன்றியம், வாழவந்திகோப்பை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ₹47 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, கதிரடிக்கும் களம், மயானத்திற்கு எரிமேடை, சுற்றுச்சுவர், பேவர் பிளாக் சாலை, அங்கன்வாடி மையம், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்து, அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் பிடிஓ.,க்கள் ரவிச்சந்திரன், பாஸ்கரன், ஒன்றிய குழு தலைவர் மணிமாலா, துணைத் தலைவர் கீதா, ஒன்றிய குழு உறுப்பினர் சித்ரா, திமுக நிர்வாகிகள் வெண்ணங்கி குமார், கர்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: